“அமுதசுரபி” பற்றி

Shriram Group Logo

அள்ள அள்ளக் குறையாத இலக்கியச் செல்வங்களை வாரி வழங்கி வரும் “அமுதசுரபி” 1948-இல் தொடங்கப்பெற்றது. “சொல்லின் செல்வர்” ரா.பி. சேதுப்பிள்ளை, இப்பெயரைச் சூட்டினார். கலைமாமணி விக்கிரமன், 54 ஆண்டுகள், “அமுதசுரபி”யின் ஆசிரியராய் விளங்கினார். ஸ்ரீராம் குழுமமான, ஸ்ரீராம் அறக்கட்டளை மூலமாக 1976 முதல் “அமுதசுரபி”யை நடத்தி வருகிறது. எண்ணற்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் எமது இதழில் எழுதித் தம்மையும் தமிழையும் வளர்த்து வருகிறார்கள். 2005 முதல் முனைவர் டாக்டர் திருப்பூர்கிருஷ்ணன் அவர்கள் ஆசிரியர் பொறுப்பேற்று இதனை ‘இதழல்ல இயக்கமாக’ நடத்திவருகிறார்.

பொது நூலகத் துறையின் அனைத்து மாவட்ட/கிளை நூலகங்கள், அரசுப் பள்ளிக்கூட நூலகங்கள், ஆகியவற்றில் “அமுதசுரபி” இடம்பெற்றுள்ளது. பல்லாயிரம் சந்தாதாரர்கள் விரும்பி வாங்கிப் படித்து வருகிறார்கள்.

இலக்கியம் மட்டுமின்றி அறிவியல், பொருளாதாரம், மருத்துவம், சிறுசேமிப்பு, மழைநீர் சேகரிப்பு, மகளிர் நலன்,
ஆன்மீகம், இசை, கலை, தலைசிறந்த தலைவர்கள், சான்றோர், இளம் சாதனையாளர்கள், நூல் விமர்சனம் ஆகிய ஏராளமான சிறந்த பகுதிகளை நல்ல தமிழில் வழங்கி வருகிறோம்.

“அமுதசுரபி” தீபாவளிமலர், கலை-இலக்கியக் களஞ்சியமாய், கருவூலமாய்த் திகழ்வதைத் தாங்கள் அறிவீர்கள். “அமுதசுரபி”யின் ஒவ்வோர் இதழையும் அதே அளவு சிரத்தையுடன் தயாரிக்கிறோம் என்பதை தெரிவித்து மகிழ்கிறோம்.

சிந்தனைத் திறனும் கூர்மையும் ஆன்மீகப் பற்றும் படிப்பார்வமும் மிக்க “அமுதசுரபி” வாசகர்கள், முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாய்த் திகழ்கிறார்கள். இவ்விதழைப் பெண்கள், அதிகமாகப் படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் குழு:

ஆசிரியர் 
டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் எம்.ஏ., பிஎச்.டி.,

பதிப்பாளர்
ஏ.வி.எஸ். ராஜா

அலுவலக நிர்வாகி 
லோக. குமரேசன்

இதழ் தயாரிப்புக் குழு
மாலினி
உமா
சேகர்

படைப்பாளிகள் கவனத்திற்கு:

புதுமையும் செறிவும் சுவையும் சுருக்கமும் மிக்க படைப்புகளை வரவேற்கிறோம். தேர்வுபெறாத படைப்புகளை திரும்பப் பெற இயலாது. ஆகவே தாங்கள் ஒரு நகலை வைத்துக் கொண்டு அனுப்பவும்.